புவி அறிவியல் அமைச்சகம்
ஆழ்கடல் பணிகளின் மேம்பாடு
प्रविष्टि तिथि:
12 MAR 2026 12:41PM by PIB Chennai
ஆழ்கடல் பணிகள் ஆறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. அவை (1) ஆழ்கடல் சுரங்கப் பணிகளுக்கான தொழில்நுட்ப மேம்பாடு, நீரில் மூழ்கக்கூடிய மற்றும் நீருக்கடியில் செல்லக்கூடிய எந்திர மனிதர்கள், (2) பெருங்கடல் பகுதிகளில் பருவநிலை மாற்றம் தொடர்பான பணிகளின் மேம்பாடு, (3) ஆழ்கடல் பல்லுயிர் ஆய்வு மற்றும் பாதுகாப்பிற்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், (4) ஆழ்கடல் ஆய்வுப் பணிகள், (5) கடலில் இருந்து ஆற்றல் மற்றும் நன்னீர், மற்றும் (6) பெருங்கடல் உயிரிகளுக்கான மேம்பட்ட கடல் மையத்தை அமைத்தல் ஆகியவை ஆகும். ஆழ்கடல் பணியின் கீழ், குறிப்பிடத்தக்க வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.
மூன்று நீர்வாழ் உயிரினங்களுடன் 6000 மீட்டர் ஆழத்தை அடையக்கூடிய இந்தியாவின் முதன்மை மனித நீரில் மூழ்கக்கூடிய மத்ஸ்ய - 6000 - ன் வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும் இது தொடர்பான சோதனைகள் 2025 - ம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில், சென்னைக்கு அருகிலுள்ள காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி நிறுவனத்திற்குச் சொந்தமான துறைமுகத்தில் நடத்தப்பட்டன.
இந்தியாவில் உள்ள கடற்கரைகளில், 100 ஆண்டுகளுக்கு மீண்டும் கடல் மட்டம் உயர்வது குறித்த ஆய்வுகள் நிறைவடைந்துள்ளது. மேலும் அதனுடன் தொடர்புடைய கடலோர பாதிப்பு குறித்த வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கடல்சார் கண்காணிப்பை வலுப்படுத்த, ஹைதராபாத்தில் உள்ள இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையம், அரேபிய கடல் (67°E) மற்றும் வங்காள விரிகுடா (89°E) ஆகியவற்றில் முன்னதாக அமைக்கப்பட்ட டிரான்செக்ட்களில் 11 கிளைடர் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 92 இயற்பியல் மற்றும் உயிர்வேதியியல் ஆர்கோ மிதவைகளை இந்தியப் பெருங்கடலில் நிலைநிறுத்தியுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றிற்கு அளித்துள்ள பதிலில் மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238773®=3&lang=1
***
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2238881)
आगंतुक पटल : 58