நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
21 மாநில / யூனியன் பிரதேச சட்டப்பேரவைகள், தேசிய மின்னணு விதான் செயலி வாயிலாக, டிஜிட்டல் முறையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன
இடுகை இடப்பட்ட நாள்:
11 MAR 2026 4:05PM by PIB Chennai
தேசிய மின்னணு விதான் செயலி என்பது, அனைத்து மாநில / யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளின் காகிதப் பயன்பாடற்ற பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அவற்றை டிஜிட்டல் அமைப்புக்களாக மாற்றுவதற்கும் வடிவமைக்கப்பட்ட ஒரு பொதுவான மென்பொருள் தளமாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த டிஜிட்டல் நடவடிக்கையாகும். சட்டப்பேரவைகளில் இத்திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக, மத்திய அரசு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் அந்தந்த மாநில சட்டப்பேரவைகளுக்கு இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. தற்போது, 28 மாநில / யூனியன் பிரதேச சட்டப்பேரவைகள், தேசிய மின்னணு விதான் செயலியை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வகை செய்கிறது. இத்தகைய நடவடிக்கைகள், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான செலவுப் பகிர்வு முறை மற்றும் நிதியை விடுவிப்பு ஆகியவற்றிற்கான நிபந்தனைகளை வகுக்க உதவிடுகிறது.
தற்போது, 21 மாநில / யூனியன் பிரதேச சட்டப்பேரவைகள், தேசிய மின்னணு விதான் செயலிக்கான தளத்தின் மூலம், தங்களது சட்டப்பேரவை நடவடிக்கைகளை டிஜிட்டல் முறையில் மேற்கொண்டு வருகின்றன. மேலும் 7 மாநிலங்களில் இதன் அமலாக்கம் பல்வேறு கட்டங்களில் உள்ளன.
தேசிய மின்னணு விதான் செயலிக்கான மென்பொருள் தொகுப்பில் மொபைல் மற்றும் இணையதளப் பயன்பாடுகள், சட்டப்பேரவை சார்ந்த பணிகளின் முழுமையான டிஜிட்டல் மயமாக்கல் நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மின்னணு புத்தக தொகுதிகள் உள்ளன. இது கேள்விகள் மற்றும் அறிவிப்புகளை மின்னணு முறையில் சமர்ப்பித்தல், வர்த்தக ரீதியிலான சட்டப்பேரவை நடவடிக்கைகளை டிஜிட்டல் முறையில் செயலாக்குதல் மற்றும் சட்டப்பேரவை ஆவணங்களை ஆன்லைனில் பெறுதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துகிறது. சட்டப்பேரவைகளின் காகிதமற்ற பயன்பாட்டை ஆதரிக்கத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வன்பொருளை நிறுவுவதற்கும் இந்த திட்டம் உதவுகிறது.
நாட்டில் உள்ள அனைத்து மாநில / யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளில் தேசிய மின்னணு விதான் செயலியை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு இன்று எழுத்துமூலம் அளித்துள்ள பதிலில் இந்தத் தகவலை தெரிவித்தார்.
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238092®=3&lang=1
***
(Release ID: 2238092)
TV/SV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2238210)
வருகையாளர் எண்ணிக்கை : 11