உள்துறை அமைச்சகம்
நகர்ப்புற பேரிடர் மேலாண்மை அமைப்பு உருவாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
10 MAR 2026 3:30PM by PIB Chennai
பல பகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய பெரிய நகர்ப்புற ஒருங்கிணைப்புகள் தனித்துவமான சவால்களை முன்வைக்கிறது. எனவே, நகர்ப்புற பேரிடர் அபாய மேலாண்மை பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்குப் பேரிடர் சட்டத்தில் திருத்தம் மூலம் '41ஏ' என்ற ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலாண்மைச் சட்டம் - 2005, மாநிலத் தலைநகரங்களிலும், மாநகராட்சிகளைக் கொண்ட அனைத்து நகரங்களிலும் நகரப் பேரிடர்களை மிகவும் திறம்படக் கையாள்வதற்காக நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையத்தை (UDMA) அமைக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. வெள்ளம், வெப்ப அலைகள் உள்ளிட்ட நகர்ப்புற குறிப்பிட்ட பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான நகர்ப்புறத் திட்டத்தைத் தயாரிப்பதற்கும், அதை செயல்படுத்துவதை ஒருங்கிணைப்பதற்கும் நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் பொறுப்பாகும். நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையங்களை அமைப்பது மாநில அரசுகளின் பொறுப்பாகும்.
வானிலை ஆய்வுத் துறை (IMD) போன்ற எச்சரிக்கை நிறுவனங்கள் ஏழு நாள் முன்கூட்டியே கணிப்புகளுக்காக வானிலை முன்னறிவிப்பு அமைப்புகளில் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல மாதிரிகளை ஒருங்கிணைத்துள்ளன. வானிலை இயக்கத்தின் ஒரு பகுதியாக வெள்ள முன்னறிவிப்பு, புயல் கண்காணிப்புக்கான செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் இதில் அடங்கும்.
மக்களவையில் ஒரு கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237482®=3&lang=1
(Release ID: 2237482)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2237854)
வருகையாளர் எண்ணிக்கை : 11