தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

மேற்கு வங்கத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தது

प्रविष्टि तिथि: 09 MAR 2026 6:44PM by PIB Chennai

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோருடன் இணைந்து இன்று கொல்கத்தாவில் விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.

 

இந்தக் கூட்டத்தின் போது, அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி, ஆம் ஆத்மி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய தேசிய காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சிகளான அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் மற்றும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் ஆணையர்கள் கலந்துரையாடி அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றனர்.

 

வரவிருக்கும் தேர்தல்களின் போது வாக்காளர்கள் எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லாமல் சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசியல் கட்சிகள் ஆணையத்தை வலியுறுத்தின. அமைதியான, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்யுமாறு  தேர்தல் ஆணையத்தை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

 

இந்தியாவில் தேர்தல்கள் சட்டத்தின்படி நடத்தப்படுகின்றன என்றும், மேற்கு வங்கத்தில் பாரபட்சமற்ற, வெளிப்படையான, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதில் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார் அரசியல் கட்சிகளுக்கு உத்தரவாதம் அளித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237143&reg=3&lang=1

(Release ID: 2237143)

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2237266) आगंतुक पटल : 133
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Malayalam