குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் நடைபெற்ற பெண் தலைவர்கள் தேசிய மாநாட்டில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 08 MAR 2026 7:05PM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (மார்ச் 8, 2026) புது தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட பெண் தலைவர்களின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், வேத காலம் முதல் நவீன காலம் வரை பெண்களின் சிறந்த நிலை குறித்த ஊக்கமளிக்கும் உதாரணங்களை எடுத்துரைத்தார்.

சேவை, அர்ப்பணிப்பு, தேசியவாதம், துணிச்சல், பொறுமை, திறமை போன்ற பல பரிமாணங்களில் பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் அல்லது உயர்ந்தவர்கள் என்று அவர் கூறினார். உயர்கல்வி நிறுவனங்களில் பெரும்பாலான பட்டமளிப்பு விழாக்களில், சிறந்த செயல்திறனுக்காக பதக்கங்களைப் பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். வாய்ப்பு கிடைத்தால், பெண்கள் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை இது காட்டுகிறது என அவர் கூறினார்.

நமது பாரம்பரியத்தில், சக்தியே சிவனை முழுமையாக்குபவர் என்று குடியரசுத் தலைவர் கூறினார். சிவன், சக்தி ஆகியோரின் பிரிக்க முடியாத தன்மை நமது கலாச்சாரத்துக்கு அடிப்படையானது என்று அவர் குறிப்பிட்டார். மனித சமூகத்தின் முன்னேற்றம் ஒரு தேர் போன்றது எனவும் தேரின் இரு சக்கரங்களாக பெண்களும் ஆண்களும் சமமாகவும் இணக்கமாகவும் இருக்கும்போது மட்டுமே முன்னேற முடியும் எனவும் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236666&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2236707) வருகையாளர் எண்ணிக்கை : 27
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Kannada