PIB Headquarters
டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்தல் - டிஜிட்டல் யுகத்தில் இந்தியாவை மேம்படுத்துதல்
இடுகை இடப்பட்ட நாள்:
08 MAR 2026 9:41AM by PIB Chennai
இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம், உலக அளவில் தொழில்நுட்பம் சார்ந்த பொது சேவை வழங்கலில் மிகப்பெரிய விரிவாக்கங்களில் ஒன்றாக உள்ளது. 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டமானது, நாட்டின், ஒவ்வொரு நபருக்கும் டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குதல், டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்தல், டிஜிட்டல் நடைமுறைகள் மூலம் மக்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் டிஜிட்டல் இடைவெளி அதிகமாக இருந்தது. அதிவேக இணையம் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் மட்டும் இருந்தது. கிராமப்புறங்களில் இணைப்பு குறைவாக இருந்தது. இப்போது அகண்ட அலைவரிசைக் கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்பட்டு, கிராமங்கள், தொலைதூரப் பகுதிகள் முழுவதும் இணைப்பின் அணுகல், தரம் இரண்டுமே மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்போது, இந்த இடைவெளி வேகமாகக் குறைந்து வருகிறது.
குறைந்த விலை என்பது இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியின் முக்கிய அம்சமாக உள்ளது. இது உள்ளடக்கிய வளர்ச்சி, சிறந்த நிர்வாகம், பொருளாதார வாய்ப்புகள், ஒவ்வொரு நபருக்கும் சமூக அதிகாரமளித்தல் ஆகியவற்றை வழங்குகிறது.
பாரத்நெட் திட்டம் கிராமப்புறப் பகுதிகளுக்கு அதிவேக இணையத்தை விரிவுபடுத்துகிறது. 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில், 2.15 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள் இத்திட்டத்தால் இணையம் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. கண்ணாடி இழை கேபிள் பதிப்பு 2019-ல் 19.35 லட்சம் கிலோ மீட்டர் என்பதிலிருந்து 2025-ல் நாடு தழுவிய அளவில் 42.36 லட்சம் கிலோ மீட்டராக விரிவடைந்துள்ளது. இது நகர்ப்புற-கிராமப்புற இடைவெளியைக் குறைத்துத் தொலைதூரப் பகுதிகளுக்கு நம்பகமான இணைப்பைக் கொண்டுவருகிறது.
இந்தியாவின் மின்னல் வேக 5ஜி இப்போது 99.9% மாவட்டங்களை உள்ளடக்கியதாக உள்ளது. 2014-ம் ஆண்டில் ஒரு ஜிபி-க்கு ₹ 269 ஆக இருந்த தரவு செலவுகள் 2025-2026-ம் ஆண்டில் ஒரு ஜிபிக்கு ₹ 8 முதல் ₹10 ஆகக் குறைந்துள்ளது. இது இந்தியாவை உலகின் மலிவான தரவு சந்தைகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.
ஒட்டுமொத்தமாக இத்தகைய சீர்திருத்தங்கள் கிராமப்புற சமூகங்கள், விவசாயிகள், மாணவர்கள், தொழில்முனைவோர், விளிம்புநிலை மக்கள் என அனைவரும் இந்தியாவின் செழிப்பான டிஜிட்டல் பொருளாதாரத்தில் முழுமையாக இணைய அதிகாரம் அளித்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236529®=3&lang=1
***
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2236564)
வருகையாளர் எண்ணிக்கை : 16