பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மேற்கு வங்கத்தில் குடியரசுத்தலைவரையும், சந்தால் கலாச்சாரத்தையும் அவமதித்ததற்கு பிரதமர் கண்டனம்

இடுகை இடப்பட்ட நாள்: 07 MAR 2026 8:14PM by PIB Chennai

மேற்கு வங்க அரசு, குடியரசுத்தலைவரை அவமரியாதை செய்ததற்கும், சந்தால் கலாச்சாரத்தை அலட்சியமாக கையாண்டதற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த செயல்பாடு வெட்கக்கேடானது மற்றும் முன்னெப்போதும் நடக்காத ஒன்று என்றும், ஜனநாயகம் மற்றும் பழங்குடி சமூகங்களின் அதிகாரமளிப்பில் நம்பிக்கை கொண்ட அனைவரும் இந்த சம்பவத்தால் மிகவும் மனமுடைந்துள்ளனர் என்றும் பிரதமர் கூறினார்.

பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத்தலைவர் அவர்கள் வெளிப்படுத்திய வலியும் வேதனையும், இந்திய மக்களின் மனதில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் கூறினார்.

மேற்கு வங்கத்தின் திரிணாமூல் காங்கிரஸ் அரசு அனைத்து வரம்புகளையும் மீறிவிட்டதாகவும், குடியரசுத்தலைவருக்கு ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு மாநில அரசின் நிர்வாகமே பொறுப்பு என்றும் திரு மோடி கூறினார்.

சந்தால் கலாச்சாரம் போன்ற முக்கியமான ஒரு விஷயத்தை மேற்கு வங்க அரசு மிகவும் அலட்சியமாக நடத்துவது துரதிர்ஷ்டவசமானது என்று பிரதமர் மேலும் கூறினார்.

குடியரசுத்தலைவர் பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை வலியுறுத்திய பிரதமர், இதன் புனிதத்தன்மை எப்போதும் மதிக்கப்பட வேண்டும் என்றார். மேற்கு வங்க அரசு மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே சிறந்த உணர்வு மேலோங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

"இது வெட்கக்கேடானது மற்றும் இதுவரை நடந்திராதது. ஜனநாயகம் மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு அதிகாரமளிப்பதில் நம்பிக்கை கொண்ட அனைவரும் மனமுடைந்துள்ளனர்.

பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத்தலைவர் வெளிப்படுத்திய வலியும் வேதனையும், இந்திய மக்களின் மனதில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசு உண்மையிலேயே அனைத்து வரம்புகளையும் மீறிவிட்டது. குடியரசுத்தலைவருக்கு ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு மாநில நிர்வாகமே பொறுப்பு.

சந்தால் கலாச்சாரம் போன்ற ஒரு முக்கியமான விஷயத்தை மேற்கு வங்க அரசு மிகவும் அலட்சியமாக நடத்துவது அதே அளவுக்கு துரதிர்ஷ்டவசமானது.

குடியரசுத்தலைவர் பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. இதன் புனிதம் எப்போதுமே மதிக்கப்பட வேண்டும். மேற்கு வங்க அரசிற்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே சிறந்த உணர்வு மேலோங்கும் என்று நம்புகிறோம்.”

***

(Release ID: 2236467)

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2236558) வருகையாளர் எண்ணிக்கை : 10