பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நியூயார்க்கில் நடைபெறும் மகளிர் நிலை தொடர்பான ஐநா ஆணையத்தின் 70-வது அமர்வில் மத்திய இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் பங்கேற்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 07 MAR 2026 1:37PM by PIB Chennai

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர், ஐநா சபையின் சபையின் தலைமையகத்தில் நடைபெறும் பெண்களின் நிலை குறித்த ஆணையத்தின் (CSW-70 ) 70-வது அமர்வில் பங்கேற்க, 2026 மார்ச் 9 முதல் 12 வரை அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு பயணம் மேற்கொள்கிறார். பெண்கள் நிலை குறித்த ஆணையம் (CSW) என்பது பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் உருவாக்கப்பட்ட முதன்மையான உலகளாவிய அமைப்பாகும்.

இந்தப் பயணத்தின்போது, ஆணையத்தின் பொதுக் கலந்துரையாடலின் போது இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் உரையாற்றுவார். "பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை ஒடுக்குவது" குறித்த உயர்மட்டக் கூட்டத்திலும் அவர் உரையாற்றவுள்ளார். பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, நீதிக்கான அணுகலை வலுப்படுத்துதல், பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றுக்கான இந்தியாவின் முன்முயற்சிகளை அவர் எடுத்துரைப்பார்.

நியூயார்க்கில் உள்ள ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தர இயக்கம் நடத்தும் "பெண்கள் தலைமையிலான மேம்பாடும் தென்பகுதி நாடுகள் ஒத்துழைப்பும்" என்ற தலைப்பில் நடைபெறும் ஒரு துணை நிகழ்விலும் அமைச்சர் பங்கேற்பார். இந்த நிகழ்வு, இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா (IBSA) நிதியத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான முயற்சிகளை, குறிப்பாக உலகளாவிய தெற்கு நாடுகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதைக் காட்சிப்படுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236288&reg=3&lang=1  

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2236355) வருகையாளர் எண்ணிக்கை : 65
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati