மத்திய பணியாளர் தேர்வாணையம்
குடிமைப் பணிகள் தேர்வு 2025 முடிவுகளின் சிறப்பம்சங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
06 MAR 2026 4:10PM by PIB Chennai
மத்தியப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குடிமைப் பணிகள் தேர்வு 2025-ன் முடிவுகள் 2026 மார்ச் 6 அன்று வெளியிடப்பட்டன.
இந்தத் தேர்வில் மொத்தம் தேர்ச்சிப் பெற்ற 958 பேரை (659 ஆண், 299 பெண்) பல்வேறு சேவைப் பணிகளில் நியமனம் செய்ய தேர்வாணையம் பரிந்துரைத்துள்ளது.
தேர்ச்சியில் முதல் 5 இடம் பெற்றவர்களில் ஒருவர் பெண் மற்றவர்கள் ஆண்கள்.
குடிமைப் பணிகள் தேர்வில் திரு அனுஜ் அக்னிஹோத்ரி முதலிடம் பெற்றுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்ற திருமதி ராஜேஸ்வரி சுவே இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
மூன்றாம் இடம் பிடித்தவர் தில்லி பல்கலைக்கழகத்தில் பயின்ற திரு அகன்ஷ் தூல்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235933®=3&lang=1
****
TV/SMB/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2236144)
வருகையாளர் எண்ணிக்கை : 72