பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் பேச்சு

प्रविष्टि तिथि: 05 MAR 2026 7:20PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரானுடன் உரையாடினார்.

 

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் சூழல் குறித்த தங்களது கவலைகளைப் பற்றி தலைவர்கள் இருவரும் விவாதித்தனர். மேலும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர செயல்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

 

பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் இந்தியாவும் பிரான்சும் தொடர்ந்து இணக்கமாகவும், ஒருங்கிணைந்தும் செயல்படும் என்று பிரதமர் கூறினார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டதாவது:

 

"இன்று எனது நண்பர் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரானுடன் பேசினேன். மேற்கு ஆசியாவில் நிலவி வரும் சூழல் மற்றும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர தீர்வின் அவசியம் குறித்த எங்கள் கவலைகளைப் பரிமாறிக் கொண்டோம். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து ஒருங்கிணைந்து   மேற்கொள்வோம்.

 

@EmmanuelMacron”

 

(Release ID: 2235698)

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2235779) आगंतुक पटल : 83
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam