இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வர்த்தக ரீதியிலான உரிமத்தை அடிப்படையாகக் கொண்ட "சைக்கிளிங் லீக் ஆஃப் இந்தியா"வின் இலச்சினையை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAR 2026 5:13PM by PIB Chennai

மத்திய இளையோர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று இந்திய விளையாட்டுத் துறையின்  முன்னோடி முயற்சியான வர்த்தக உரிமம் அடிப்படையில் அமைந்த முதலாவது சைக்கிளிங் லீக் ஆஃப் இந்தியாவின் இலச்சினையை  வெளியிட்டார்.

இந்த முன் முயற்சி, நாட்டில் மிதிவண்டி ஓட்டுதலில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், இந்த நடவடிக்கை நாட்டில் சைக்கிள் ஓட்டுதலுக்கான வரையறுக்கப்பட்ட தருணத்தை பிரதிபலிப்பதாக உள்ளது என்று  மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இது இந்திய விளையாட்டுத் துறையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கும் என்றும், உலகிலேயே முதன்முறையாக உரிமம் அடிப்படையிலான சாலை சைக்கிள் ஓட்டுதல் அமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், சைக்கிள் போட்டிகளை ஏற்பாடு செய்வது மட்டுமின்றி, திறனை வளர்த்துக் கொள்வதற்கும், உலகளவிலான கவனத்தை ஈர்ப்பதற்கும், ஆரோக்கியமான மற்றும் எழுச்சிமிக்க  இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப தொழில்முறை சார்ந்த சூழல் அமைப்பை உருவாக்க உதவிடும் என்று அவர் கூறினார்.

நாட்டில் அண்மைக் காலத்தில், தொழில்முறை சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வுகளால் ஏற்படுத்தப்பட்ட உத்வேகத்தின் அடிப்படையில் இந்த முன் முயற்சி அமைந்துள்ளது என்றும், இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் “புனே கிராண்ட் டூர், அல்லது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வுகள் என இவை அனைத்தும், வரும் நாட்களில், இந்தியாவில் சைக்கிள் ஓட்டுதலை ஒரு விளையாட்டாக மேம்படுத்த உதவிடும் என்று அவர் மேலும் கூறினார்.

உலகளவிலான நிபுணத்துவத்தையும், போட்டித்தன்மையையும் உருவாக்கும் இத்தகைய  இரண்டு சர்வதேச போட்டிகளும், வளர்ந்து வரும் இந்தியாவில் உள்ள இளையோரின் திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கும், விளையாட்டின் மீதான நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட இரண்டு இளையோர்  சைக்கிள் ஓட்டுநர்களும் இந்த குழுக்களில் இடம்பெறுவர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235618&reg=3&lang=1

 

(Release ID: 2235618)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2235729) வருகையாளர் எண்ணிக்கை : 65
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu