இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
பெங்களூருவில் நடைபெறவுள்ள மை பாரத் - நாட்டு நலப்பணி திட்ட சிந்தனை முகாமில் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா, இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் கட்சே ஆகியோர் பங்கேற்கின்றனர்
இடுகை இடப்பட்ட நாள்:
05 MAR 2026 3:53PM by PIB Chennai
மத்திய இளையோர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மை பாரத், மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அதிகாரிகளுடனான இரண்டு நாள் சிந்தனை முகாமிற்கு, மார்ச் 6–7 தேதிகளில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஸ்டெம் செல் அறிவியல் மற்றும் மீளுருவாக்கம் மருத்துவ நிறுவன வளாகத்தில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாமில், மூத்த அதிகாரிகள் மற்றும் கள அளவிலான செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து, இளையோர் முன்னேற்றத்திற்கான கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, மாநிலங்களில் திட்ட அலாக்கத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளனர்.
தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, அந்தமான் & நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த விவாதங்களில் பங்கேற்க உள்ளனர். மை பாரத் மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட அமைப்புகள் மூலம் நாடு முழுவதிலும் செயல்படுத்தப்படும் இளையோர் நலத் திட்டங்களை மேலும் வலுப்படுத்துவது, பல்வேறு துறைகளுக்கிடையேயான கற்றல், அனுபவப் பகிர்வு மற்றும் உத்தி சார்ந்த கொள்கை விவாதங்களுக்கு ஒருங்கிணைந்த தளத்தை வழங்குவதே இந்த சிந்தனை முகாமின் நோக்கமாகும்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா, இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் கட்சே, இளைஞர் விவகாரத் துறை செயலாளர் டாக்டர் பல்லவி ஜெயின் கோவில், கூடுதல் செயலாளர் திரு நிதேஷ் குமார் மிஸ்ரா, மை பாரத் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அமைப்பின் மூத்த அதிகாரிகளும் இந்த விவாதங்களில் பங்கேற்கின்றனர்.
இந்த சிந்தனை முகாமின் முதல் நாள் நடைபெறும் அமர்வில், "பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு" என்பதில் கவனம் செலுத்தப்படும். இதில் பங்கேற்கும் மாநிலங்களுக்கிடையே கலந்துரையாடல், கொள்கை சீரமைப்பு மற்றும் சிறந்த நடைமுறைகளின் பரிமாற்றம் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். மை பாரத் இணையதளம் மூலம் டிஜிட்டல் இளைஞர் ஈடுபாடு, 2026 - ம் ஆண்டின் வருடாந்திர செயல் திட்டத்தை அமல்படுத்துதல் மற்றும் இளையோர் அதிகாரமளிப்புக்கான வள ஒருங்கிணைப்பை அதிகரிக்க அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு ஆகியவை அடங்கும்.
இந்த விவாதங்களின் அடிப்படையில், இரண்டாவது நாள் நடைபெறும் அமர்வில் "அமைதிக்கான தீர்மானத்தில்" கவனம் செலுத்தும். இதில் கருத்துக்களை செயல்படுத்தக்கூடிய உத்திகளாக மாற்றுவதற்கென வடிவமைக்கப்பட்ட கருப்பொருள் அமர்வுகள் நடைபெறும். பங்கேற்பாளர்களின் ஒருங்கிணைந்த கொள்கை ஆய்வகங்கள், தீர்வு வடிவமைப்பு பயிற்சிகள் மற்றும் செயல் திட்டமிடல் அமர்வுகள் இடம்பெறும். இது மாநிலங்கள் முழுவதும் திட்ட அமலாக்க நடைமுறைகளை வலுப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235553®=3&lang=1
***
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2235671)
வருகையாளர் எண்ணிக்கை : 69