நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நெய்வேலியில் சுரங்கப் பணிகளை நிறுத்துவது மற்றும் மறுபயன்பாடு குறித்த தேசிய பயிலரங்கு

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAR 2026 4:12PM by PIB Chennai

மத்திய நிலக்கரி அமைச்சகம் மற்றும் என்எல்சி நிறுவனத்தின் கீழ், சுரங்கப் பணிகளை நிறுத்துவது மற்றும் மறுபயன்பாடு குறித்த இரண்டு நாள் தேசிய பயிலரங்கு பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் நெய்வேலியில் நடைபெற்றது. இந்த இரண்டுநாள் பயிலரங்கை, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி தொடங்கி வைத்தார். கட்டமைக்கப்பட்ட சுரங்கங்களை மூடுவதற்கான திட்டமிடல் மற்றும் நிலையான சுரங்கப் பணிகளுக்குப் பிந்தைய நில மறுபயன்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையிலான இந்தியாவின் முதலாவது தேசிய அளவிலான முயற்சியாகும். இந்தப் பயிலரங்கில், நிலக்கரித்துறை செயலாளர் திரு விக்ரம் தேவ் தத், கூடுதல் செயலாளர்கள், திருமதி ருபிந்தர் பிரார் மற்றும் சனோஜ் குமார் ஜா, நிலக்கரித்துறை கட்டுப்பாட்டாளர் திரு சஜீஷ் குமார்  ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தப் பயிலரங்கில், சுரங்கப் பணிகளை நிறுத்துவதற்காக அடையாளம் காணப்பட்ட சுரங்கங்களைச் சேர்ந்த 147 துறை சார்ந்த அதிகாரிகள், நிலக்கரித் துறை பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் சுரங்க நிறுவனங்கள், ஒழுங்குமுறை அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள், நிதி நிறுவனங்கள், கல்வியாளர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தப் பயிலரங்கின் முக்கிய சிறப்பம்சமாக, அரசு, தொழில், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் சர்வதேச நிறுவனங்களைச் சேர்ந்த 29 புகழ்பெற்ற பயிற்றுநர்கள் பங்கேற்கும் ஒன்பது கருப்பொருள் சார்ந்த அமர்வுகளை நடத்தியது. பயன்பாடற்ற சுரங்கங்களை மூடுவது குறித்தும், சுரங்கப் பணிகளுக்குப் பிந்தைய மாற்றங்களில் நடைமுறை சார்ந்த பல்வேறு அம்சங்கள் குறித்த தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். நிலையான, சமூகம் சார்ந்த சுரங்கங்களை மூடுவது தொடர்பான உத்திகளைத் திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலை வழங்கினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235573&reg=3&lang=1

***

TV/SV/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2235641) வருகையாளர் எண்ணிக்கை : 91
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu