இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அறிவியல் சார்ந்த முன்முயற்சியின் மேம்பட்டத் தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்ட ரைசினா மாநாடு

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAR 2026 3:19PM by PIB Chennai

அறிவியல் சார்ந்த முன்முயற்சி குறித்த ரைசினா மாநாடு, மார்ச் 5, 2026 அன்று புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முன் முயற்சியை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் மற்றும்  அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இந்த மாநாட்டில், உலகளவில் சிந்தனையாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அறிஞர்களை ஒன்றிணைத்து, உத்தி சார்ந்த தன்னாட்சி முறையின் அதிகரித்து வரும் அழுத்தங்கள் மற்றும் மேம்பட்ட  தொழில்நுட்பங்களால் ஏற்படும் நிர்வாக சவால்களை எதிர்கொண்டு வழிநடத்துவதில், அறிவியல் ரீதியிலான வியூகத்தின் பங்களிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டிற்கு, பல்வேறு நாடுகளிலிருந்தும்,  முன்னணி சர்வதேச அமைப்புகளிலிருந்தும் 80 விஞ்ஞானிகள், புதுமைக் கண்டுபிடிப்பாளர்கள், தூதரக அதிகாரிகள், அறிவியல் அறிஞர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்றனர். வெளிப்படையான கருத்துப் பரிமாற்றத்தை எளிதாக்கும் வகையில் விவாத அமர்வுகள் நடைபெற்றன.

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சர்வதேச அறிவியல் கவுன்சிலின் தலைவர் சர் பீட்டர் குளக்மேன், ஜெனீவா அறிவியல் அமைப்பின் தலைமை இயக்குநர் பேராசிரியர் மர்லின் ஆண்டர்சன், பாஜகவின் அயலகத் துறையின் பொறுப்பாளர் டாக்டர் விஜய் சௌதைவாலே ஆகியோர் இணைத் தலைவர்களாகப் பங்கேற்றனர். இம்மாநாட்டின் தொடக்க அமர்வில் போட்டித்தன்மை, தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு முன்னுரிமைகள், சமூக-பொருளாதார முன்னேற்றம் போன்ற சூழல்களுக்கு இடையே அறிவியல் மற்றும் மேம்பட்டத் தொழில்நுட்பத்தின் அதிகரித்து வரும் முக்கியத்தும் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள், மாறிவரும் புவிசார் அரசியல் சூழல்கள் மற்றும் அதிகரித்து வரும் உலகளவிலான சவால்களுக்கு ஏற்ப தொடர்ந்து மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235538&reg=3&lang=1

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2235617) வருகையாளர் எண்ணிக்கை : 73
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati