PIB Headquarters
azadi ka amrit mahotsav

குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்கும் பிரதமரின் மக்கள் மருந்தகங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAR 2026 11:11AM by PIB Chennai

பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டத்தின் கீழ் உள்ள மருந்தகங்கள், அன்றாட சுகாதாரப் பராமரிப்பை சேமிப்பு, தன்னம்பிக்கை, கண்ணியம் ஆகியவற்றுடன் கூடிய வெற்றிக் கதையாக மாற்றுகின்றன. மூத்த குடிமக்களுக்கு , இந்த மையங்கள் மருந்துகளை மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையில் சுதந்திரம், நம்பிக்கை, கண்ணியத்தையும் வழங்குகின்றன.

தில்லியைச் சேர்ந்த 60 வயதான ஸ்வேதா தனியாக வசிக்கிறார். அவர் தனது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள மக்கள் மருந்தகத்தில் நீரிழிவு நோய்க்கான மருந்துகள், கால்சியம், வைட்டமின்கள், இன்சுலின் போன்றவை தொடர்பான மருந்துகளை தொடர்ந்து வாங்குகிறார் .

"முன்பெல்லாம் மருந்துகள் விலை அதிகமாக இருந்தன. மாதாந்திர செலவுகளை நிர்வகிப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. மக்கள் மருந்தகம் வந்த பிறகு அந்தக் கவலை இல்லை," என்று அவர் பகிர்ந்து கொள்கிறார்.

தில்லியைச் சேர்ந்த கோவர்தன், கடந்த ஆறு ஆண்டுகளாக, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்துகளை வாங்கி வருகிறார்.

"நல்ல தரமான மருந்துகளை மலிவு விலையில் நாங்கள் பெறுகிறோம்." என்று அவர் கூறுகிறார்.

தில்லியைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் கூறுகையில், "எனக்கும் என் மனைவிக்கும் ₹2,000-ல் இப்போது மருந்துகள் கிடைக்கிறது. இதையே வெளியில் வாங்கினால், ஒவ்வொரு மாதமும் ₹7,000 செலவாகும்," என்று விளக்கினார். தொழிலாளியான அசோக் குமாரும் இதேபோன்ற கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.

தில்லியைச் சேர்ந்த ராம் ஆதார் ஒரு மாற்றுத் திறனாளி தொழில்முனைவோர். அவர் ஒரு மக்கள் மருந்தக மையத்தை நடத்துகிறார். எளிய மக்களின் வீடுகளுக்கு அருகில் தரமான மருந்துகளை, மலிவு விலையில்  வழங்குவதன் மூலம் தாம் சமூகத்திற்கு சேவை செய்வதாக அவர் கூறுகிறார்.

நீண்டகால நோய்களால் அவதிப்படுவோருக்கு, மலிவு விலையில் மருந்துகள் வழங்க வேண்டியது ஒரு அவசியத் தேவை. இந்த மருத்துவத் தேவை மக்கள் மருந்தகங்கள் மூலம் அதிக நிதிச் சுமை இல்லாமல் பூர்த்தி செய்யப்படுகின்றன. இந்த மக்களின் அனிபவக் கதைகள் மூலம், ஒரு செய்தி தெளிவாகிறது. 'மக்கள் மருந்தக மையங்கள் மருந்துகளை விற்கும் கடைகள் மட்டுமல்ல; அவை நம்பிக்கை, நிவாரணம், அதிகாரமளிப்புக்கான இடங்கள்' என்பதே அந்தச் செய்தி.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235420&reg=3&lang=1

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2235519) வருகையாளர் எண்ணிக்கை : 71
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam