பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுப்பிக்கப்பட்ட விடுதிக் கட்டிடம் மற்றும் ஆசிரிய மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 FEB 2026 6:49PM by PIB Chennai

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, டெல்லியில் உள்ள சாவித்திரிபாய் பூலே தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின்  புதுப்பிக்கப்பட்ட விடுதிக் கட்டிடத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது, அங்குள்ள குழந்தைகள் வழிகாட்டு மையம் மற்றும் இளையோர் வழிகாட்டு சேவை மையத்திற்கு வரும் பெற்றோருடன் அமைச்சர் கலந்துரையாடினார். குறிப்பாக, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோரைச் சந்தித்து அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்ததோடு, குழந்தைகளுக்குச் சமமான உரிமைகளும் வாய்ப்புகளும் கிடைப்பதை அரசு உறுதி செய்யும் என உறுதியளித்தார். இம்மையங்களில் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் காலம் 6 மாதங்களிலிருந்து குறைக்கப்பட்டு, தற்போது உடனடி சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

தொடர்ந்து, சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலுடன்  இணைந்து நடத்தப்படும் ஐந்து நாள் 'ஆசிரிய மேம்பாட்டுத் திட்டத்தையும்' அமைச்சர் தொடங்கி வைத்தார். இது ஆராய்ச்சித் திறனை வலுப்படுத்தி, கொள்கை உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றும் என அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் மத்திய இணையமைச்சர் திருமதி சாவித்திரி தாக்கூர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233646&reg=3&lang=1        

***

TV/VK/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2233985) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी