பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியின கலை, கலாச்சாரம், தொழில்முனைவு ஆகியவற்றைக் கொண்டாடும் தேசிய முயற்சிகள் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு ஜுவல் ஓரம் உரையாற்றினார்

இடுகை இடப்பட்ட நாள்: 28 FEB 2026 4:35PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்  வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய முன்முயற்சிகளை செயல்படுத்துகிறது. இந்த முயற்சிகள், பழங்குடியின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும், படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்கும், தொழில்முனைவோரை வலுப்படுத்துவதற்கும், சந்தை அணுகலை விரிவுபடுத்துவதற்கும், நிலையான பழங்குடி மேம்பாட்டிற்கான பெருநிறுவன ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இது தொடர்பாக இன்று (28.02.2026) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு ஜுவல் ஓரம், இந்த முயற்சிகளின் நோக்கம் குறித்து விரிவாகக் கூறினார். கலாச்சாரப் பாதுகாப்பு, நிறுவன மேம்பாடு, தேசிய வளர்ச்சியின் மையத்தில் பழங்குடி சமூகங்களை நிலைநிறுத்துவது ஆகியவற்றின் மூலம் நீண்டகால சமூக-பொருளாதார தாக்கத்தை உருவாக்க இந்த திட்டங்கள் உருவாக்கும் அவர் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சருடன், பழங்குடியினர் நலத் துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே, செயலாளர் திருமதி ரஞ்சனா சோப்ரா, இணைச் செயலாளர் திரு அனந்த் பிரகாஷ் பாண்டே உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

பழங்குடியினர் கலை விழா 2026 மார்ச் 02 முதல் 16 வரை புதுதில்லியில் நடைபெறும் என்று இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233932&reg=3&lang=1       

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2233982) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Odia , Malayalam