விவசாயத்துறை அமைச்சகம்
ஜான்சியில் உள்ள ராணி லட்சுமி பாய் மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
28 FEB 2026 2:08PM by PIB Chennai
ஜான்சியில் உள்ள ராணி லட்சுமி பாய் மத்திய வேளாண் பல்கலைக்கழகம், அதன் மூன்றாவது பட்டமளிப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்தது. மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் இதில் தலைமை விருந்தினராக தனது உரை நிகழ்த்தினார். அவர் 365 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியதுடன், 15 திறமையான மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. சிவராஜ் சௌகான், "பட்டமளிப்பு விழா என்பது கல்வியின் முடிவு அல்ல எனவும், அது தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும் என்றும் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், இந்தியா உலகளாவிய மரியாதையைப் பெற்று வருகிறது என்றும், தற்போது இளைஞர்கள் தங்கள் அறிவு, திறன்கள், மதிப்புகள் ஆகியவை மூலம் தேசத்திற்குப் பெருமை சேர்ப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் உணவுப் பாதுகாப்பை எடுத்துரைத்த அவர், இப்போது இந்தியா உணவு தானியங்களுக்கு எந்த நாட்டையும் சார்ந்திருக்கவில்லை என்று கூறினார். இந்த சாதனைக்கு வேளாண் விஞ்ஞானிகள், கடினமாக உழைக்கும் விவசாயிகள் ஆகியோர்தான் காரணம் என்று அவர் கூறினார். ஆய்வகங்களிலிருந்து விவசாயிகளின் வயல்களுக்கு, அறிவு பயணிப்பதை உறுதி செய்யும் போது உலகின் உணவு மையமாக இந்தியா மாறும் என்று திரு சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233880®=3&lang=1
***
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2233920)
வருகையாளர் எண்ணிக்கை : 13