பாதுகாப்பு அமைச்சகம்
புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு அலுவலக வளாகத்தில் ரத்தத்தான முகாம்
இடுகை இடப்பட்ட நாள்:
27 FEB 2026 12:24PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அலுவலகம் மருத்துவச் சேவைகள் தலைமை இயக்குநரகம் ஆகியவை ஒருங்கிணைந்து நேற்று (26.02.2026) ஆயுதப்படை வீரர்களுக்கான ரத்த தான முகாமை நடத்தியது. இந்த முகாம் புதுதில்லியில் உள்ள ஆப்பிரிக்கா அவென்யூவில் உள்ள பாதுகாப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
தில்லி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஆயுதப்படை மையத்தைச் சேர்ந்த மருத்துவக் குழு இந்த ரத்ததான முகாமை நடத்துவதற்கு தேவையான மருத்துவ பணியாளர்கள் மற்றும் உபகரணங்களை வழங்கியது.
இந்த ரத்தத்தான முகாம் ஆயுதப்படை வீரர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன் அவர்களின் சேவைக்கான அர்ப்பணிப்பு உணர்வையும் பிரதிபலிப்பதாக உள்ளது. இந்த முகாமில் ஆயுதப்படை தலைமையகத்தின் சிவில் அதிகாரிகள், சேவை பணியாளர்கள் உட்பட மொத்தம் 131 அதிகாரிகள் கலந்து கொண்டு ரத்தத்தானம் செய்தனர். ரத்தத் தானம் வழங்கிய அனைத்து நன்கொடையாளர்களுக்கு உடனடியாக பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
----
(Release ID: 2233412)
TV/SV/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2233523)
வருகையாளர் எண்ணிக்கை : 8