மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு மற்றும் பாலின அதிகாரமளித்தல் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய புத்தகம் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
27 FEB 2026 9:32AM by PIB Chennai
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாக பாலின அதிகாரமளித்தல் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய புத்தகம் இம்மாதம் 17-ம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற இந்திய செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்டது.
இது உள்ளடக்கிய மற்றும் நெறிமுறை சார்ந்த நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய வளர்ச்சியை எட்டுவதில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
ஐநா மகளிர் அமைப்பு, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இணைந்து இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் மூலம் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆதரவுடன் உலகின் தென்பகுதியில் உள்ள நாடுகளுக்கு பாலின சமத்துவம் மற்றும் மகளிருக்கு அதிகாரமளித்தலுக்கான நடவடிக்கைகள், 23 நிகழ்நேர செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தீர்வுகள் குறித்து இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திரு அனில் மாலிக் மற்றும் ஐநா மகளிர் அமைப்பின் ஆசியா பசிபிக் பிராந்திய இயக்குநர் திருமதி கிறிஸ்டின் அரேப் ஆகியோர் இந்தப் புத்தகத்தை வெளியிட்டனர். புதுதில்லியில் நுண்ணறிவுத் தாக்க உச்சிமாநாட்டின் போது நடைபெற்ற கண்காட்சியில் ஐநா மகளிர் அமைப்பு சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கை ஐநா பொதுச் செயலாளர் திரு அந்தோனியா குட்ரஸ் நேரில் பார்வையிட்ட பின் இந்தப் புத்தகம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. எதிர்கால தொழில்நுட்பங்களில் பெண்கள் முன்னேறுவதற்கான வழிவகைகளை பிரதிபலிக்கும் வகையிலும் புதிய திறன்களை உருவாக்க கற்றலுக்கான நடைமுறைகளை விரிவுபடுத்தும் வகையிலும் அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டைப் பயன்படுத்துவது குறித்து இளம் பெண்கள் இந்த மாநாட்டில் ஒருபகுதியாக அமர்வில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233368®=3&lang=1
----
TV/SV/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2233435)
வருகையாளர் எண்ணிக்கை : 12