மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
விண்வெளித் துறையில் இணையதளப் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
26 FEB 2026 4:55PM by PIB Chennai
செயற்கைக்கோள் தொடர்பு அமைப்புகள் உட்பட விண்வெளித்துறையில் இணையதளப் பாதுகாப்பு, இந்தியாவின் விண்வெளி சார்ந்த செயல்பாடுகளுக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது.
இத்தகைய அமைப்புகள் தொலைதூர மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த புவிசார் பகுதிகளில் இணையதள இணைப்பை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தேசிய பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளுக்கு இது உதவிகரமாக உள்ளது. பேரிடர் தொடர்பான தகவல்கள், வழிகாட்டும் செயலிகள் மற்றும் ஒலிபரப்பு சேவைகளை இது எளிதாக்குகிறது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கணினி அவசரகால மீட்புக் குழு விண்வெளித் தகவல் தொடர்பு சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும், இந்தியாவின் விண்வெளி சூழல் அமைப்பின் மீள்தன்மைக்கும், விண்வெளி சார்ந்த இணையதளப் பாதுகாப்பு கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்கும் தேவையான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது. இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் அடங்கிய ஆவணம் பிப்ரவரி 24-26, 2026 அன்று புதுதில்லியில் நடைபெற்ற மாநாட்டின் போது வெளியிடப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233122®=3&lang=1
***
AD/SV/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2233216)
வருகையாளர் எண்ணிக்கை : 12