குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஜாம்ஷெட்பூரில் ஸ்ரீ ஜெகந்நாதர் ஆலயத்தின் பூமி பூஜை விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 26 FEB 2026 3:21PM by PIB Chennai

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள ஸ்ரீஜெகந்நாதர் ஆலயத்தில் இன்று நடைபெற்ற பூமி பூஜை விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார். இந்த விழா, அந்த ஆலயத்தின் ஆன்மீகம் மற்றும் கலாச்சார தொண்டு மையத்தின் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், ஸ்ரீஜெகந்நாதர் முழு உலகிற்குமான இறைவனாகவும், அவரது அருள் மனிதகுலத்தின் மீது எவ்வித பாகுபாடுமின்றி சம அளவில் கிடைத்து வருவதாகவும் கூறினார்.

கோல்கான் பகுதி நாட்டின் இதர ஆன்மீகம் சார்ந்த மரபுகளுடன் பழங்குடியின சமுதாயத்தின் பாரம்பரியத்துடனான சங்கமத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது என்று அவர் கூறினார். இப்பிராந்தியத்தில் வசிக்கும் மக்கள் பல நூற்றாண்டுகளாக தொன்மையான மரபுகளை போற்றி பாதுகாத்து வருவதாக அவர் தெரிவித்தார். இப்பகுதியில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதாகவும், இது சமூக நல்லிணக்கத்திற்கு ஸ்ரீ ஜெகந்நாதரின் மீதான பக்தியின் ஒரு முக்கிய அம்சமாகும் என்றும் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.   

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233056&reg=3&lang=1

***

AD/SV/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2233133) வருகையாளர் எண்ணிக்கை : 101
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Odia , Malayalam