பிரதமர் அலுவலகம்
வீர சாவர்க்கரின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 FEB 2026 10:47AM by PIB Chennai
வீர சாவர்க்கரின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.
கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட பாரத அன்னையின் புதல்வரான வீர சாவர்க்கரின் வாழ்க்கையிலிருந்து பாதகமான சூழல் இருந்த போதிலும், உறுதியான நிலைப்பாட்டுடன் இருப்பதற்கான பாடத்தை அவரது வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். தாய்நாட்டின் மீதான அவரது துணிச்சல், கட்டுப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு எப்போதும் நாட்டு மக்களை வழிநடத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
துணிச்சல் மற்றும் உறுதியான மனம் படைத்த மனிதர்கள், துயரங்களைக் கடந்து அவர்களது வாழ்க்கையில் வெற்றி அடையும் திறன் படைத்தவர்கள். அத்தகைய நபர்கள் செல்வந்தராகவும், வளம் படைத்தவர்களாகவும் உருவெடுக்கிறார்கள். எனவே பொறுமையும், துணிச்சலும் கொண்ட ஒருவர், எப்போதும் வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கு சிறந்த வழியாகும்.
***
(Release ID: 2232946)
AD/SV/RJ/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2233034)
வருகையாளர் எண்ணிக்கை : 11