ரெயில்வே அமைச்சகம்
ரயில்வே ஓய்வூதியதாரர்களின் விவரங்கள் தொலைபேசி, சமூகவலைதளங்கள் வாயிலாக கேட்கப்படுவதில்லை – ரயில்வே அமைச்சகம்
प्रविष्टि तिथि:
25 FEB 2026 5:16PM by PIB Chennai
ரயில்வே ஓய்வூதியதாரர்களின் தனிப்பட்ட மற்றும் நிதி விவரங்களை குறுஞ்செய்தி அல்லது இணையதள இணைப்புகள் மூலம் கேட்கப்படுவதில்லை என்று ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. ரயில்வே அதிகாரிகளின் பெயரில் கேஒய்சி சரிபார்த்தல், கூடுதல் ஓய்வூதிய பயன் உள்ளிட்டவை தொடர்பாக குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் செயலி மூலமும், தொலைபேசி அழைப்பின் மூலமும் போலியாக தகவல் கேட்கப்படுவதையடுத்து ரயில்வே அமைச்சகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
ஓய்வூதியதாரர்களின் வங்கி விவரங்கள், ஓடிபி எண்கள், பாஸ்வேர்ட் ஆகியவற்றை தொலைபேசி, குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் அல்லது சமூக வலைதளம் வாயிலாக கேட்பதற்கு எந்த ரயில்வே அதிகாரிகளுக்கும் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. இதையடுத்து ஓய்வூதியதாரர்களும், அவர்களது குடும்பத்தினரும் இந்த மோசடிக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். சந்தேகத்திற்குரிய தொலைபேசி அழைப்போ அல்லது குறுஞ்செய்தியோ வந்தால் உடனடியாக காவல்துறையின் சைபர் பிரிவுக்கும் சம்பந்தப்பட்ட நிர்வாக அலுவலத்திற்கும் புகார் தெரிவிக்குமாறு ரயில்வே அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232729®=3&lang=1
****
TV/IR/RK/SH
(रिलीज़ आईडी: 2232813)
आगंतुक पटल : 87