புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

₹150 கோடிக்கும் அதிகமான மதிப்பில் செயல்படுத்தப்படும் மத்திய துறை திட்டங்கள் குறித்த விவரங்களை புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 25 FEB 2026 4:59PM by PIB Chennai

மத்திய அரசின், புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம், ₹150 கோடி, அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள மத்திய துறை உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இவற்றை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட பைமனா (PAIMANA) எனப்படும் தேசியக் கட்டமைப்பிற்கான திட்ட மதிப்பீடு, உள்கட்டமைப்பு கண்காணிப்பு, பகுப்பாய்வு என்ற புதிய ஒருங்கிணைந்த திட்ட கண்காணிப்பு தளம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இது மத்திய அமைச்சகங்கள்/துறைகளால் தெரிவிக்கப்படும் தகவல்களின் தானியங்கி தரவு ஓட்டத்தை செயல்படுத்துகிறது. பைமானா-வில் உள்ள சுமார் 60 சதவீத திட்டங்கள் தானாகவே புதுப்பிக்கப்பட்டு, அரசால் தரப்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு திட்ட கண்காணிப்புக்கு பங்களிக்கிறது.

இதன்படி ஜனவரி 2026 வரை இந்தத் திட்டங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த செலவு ₹20.02 லட்சம் கோடியாகும். தற்போது நடைபெற்று வரும் 1,702 உள்கட்டமைப்பு திட்டங்களில், 645 திட்டங்கள் 80% க்கும் அதிகமான பணிகளின் முன்னேற்றத்தை அடைந்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232712&reg=3&lang=1

***

TV/IR/RK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2232802) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , हिन्दी , Marathi , English