பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி பாரத போர்க்களக் காட்சி குறித்தப் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 25 FEB 2026 4:41PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் ராணுவ தளபதி ஜென்ரல் உபேந்திர திவிவேதி பாரத போர்க்களக் காட்சி குறித்தப் பயணத்தை சிவில் மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த பிரதிநிதிகள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பயணம் இந்திய ராணுவத்தின் ஆயுதப் படைப் பிரிவின் தலைமையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தப் பயணம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உத்திசார் மாண்புகளை எடுத்துரைக்கும் ஒரு முன்முயற்சி என்று கூறினார்.

இந்தியாவின் வளமான பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் வகையிலும், தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினர் நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்ற ஆர்வத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  இந்தப் பயணம் எல்லைப் பகுதிகள் மற்றும் போர்க்களங்களில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்தியாவின் வலுவானப் பாதுகாப்பு சார்ந்த பங்களிப்பை எடுத்துரைப்பதாக அமையும் என்று திரு உபேந்திர திவிவேதி தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232701&reg=3&lang=1

***

TV/SV/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2232796) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Marathi