சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
கோவாவில் போதைப்பொருள் உபயோகத்திற்கு எதிரான பிரம்மாண்ட பேரணி பிப்ரவரி 27ல் நடைபெறுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
25 FEB 2026 12:24PM by PIB Chennai
போதைப்பொருள் இல்லா இந்தியா இயக்கத்தின் கீழ், போதைப்பொருளுக்கு எதிராக இளைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி கோவாவில் 2026 பிப்ரவரி 27 அன்று நடைபெறுகிறது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை கோவா அரசுடன் இணைந்து அங்குள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில் காலை 9 மணிக்கு பொதுமக்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சிறப்புமிக்க நிகழ்வில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பற்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், கோவா சமூக நலத்துறை அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் போதைப் பொருள்கள் உபயோகத்திற்கு எதிராக இளைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி, நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றல், கலாச்சார நிகழ்ச்சிகள், போதைப்பொருள் இல்லா இந்தியா இயக்கத்தின் சாதனைகள் மற்றும் வெற்றிக் கதைகளை தெரிந்து கொள்ளுதல் ஆகியவை இடம்பெறுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232576®=3&lang=1
***
AD/IR/RK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2232641)
வருகையாளர் எண்ணிக்கை : 10