மத்திய பணியாளர் தேர்வாணையம்
இந்திய வனப் பணி (முதன்மை) தேர்வு 2025 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
25 FEB 2026 11:09AM by PIB Chennai
மத்திய குடிமைப் பணி தேர்வாணையம் (யுபிஎஸ்சி) 2025 நவம்பர் 16 முதல் நவம்பர் 23 வரை நடத்திய இந்திய வனப் பணி (முதன்மை) தேர்வு 2025 முடிவின் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றவர்களின் தேர்வு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் தங்களது வயது, கல்வித் தகுதிகள், ஜாதி, பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் என்பதற்கான சான்று போன்ற அசல் ஆவணங்களை நேர்முக தேர்வின் போது சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதனால் அந்த ஆவணங்களை தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, இடபிள்யூஎஸ், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீர்ர்கள் போன்றவற்றிற்காக ஒதுக்கீடு கோருபவர்கள் அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நேர்முகத் தேர்வு குறித்த தேதி தேர்வர்களுக்கு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். இத்தேர்வு புதுதில்லி ஷாஜஹான் சாலையில் உள்ள மத்திய குடிமைப்பணி தேர்வாணையத்தில் நடைபெறும். இதுகுறித்த தகவல்களை https://www.upsc.gov.in & https://upsconline.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
நேர்முகத் தேர்வின் தேதி மற்றும் நேரம் ஆகியவற்றில் மாற்றம் செய்வது குறித்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232534®=3&lang=1
***
AD/IR/RK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2232638)
வருகையாளர் எண்ணிக்கை : 18