பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அர்ஜென்டினாவில் அகோன்காகுவா மலைச் சிகரத்தை இந்திய குழுவினர் வெற்றிகரமாக அடைந்தனர்

இடுகை இடப்பட்ட நாள்: 24 FEB 2026 1:17PM by PIB Chennai

தென் அமெரிக்காவின் மிக உயர்ந்த சிகரமும், ஆசியாவிற்கு வெளியே இரண்டாவது மிக உயர்ந்த சிகரமுமான மவுண்ட் அகோன்காகுவாவை இந்திய மலையேற்றக் குழுவினர் 2026 பிப்ரவரி 22 அன்று பிற்பகல் மணி 2.10க்கு வெற்றிகரமாக அடைந்தனர். உத்தர்காசியில் உள்ள நேரு மலையேற்ற நிறுவனம், பஹல்காமில் உள்ள ஜவஹர் மலையேற்ற மற்றும் குளிர்கால விளையாட்டு நிறுவனம் (என்ஐஎம், ஜெஐஎம் மற்றும் டபிள்யூஎஸ்) ஆகியவற்றை சேர்ந்த 6 பேரை கொண்ட குழுவினர் இச்சாதனையை படைத்துள்ளனர்.

கர்னல் ஹேம் சந்திர சிங் (முதல்வர், என்ஐஎம், ஜெஐஎம் மற்றும் டபிள்யூஎஸ்) தலைமையிலான இக்குழுவினரின் பயணத்தை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2026 பிப்ரவரி 5 அன்று கொடியசைத்து துவங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட அவர்கள் தங்கள் மலையேற்றத்தை தொடங்குவதற்காக 2026 பிப்ரவரி 8 அன்று அர்ஜென்டினா சென்றடைந்தனர்.

அகோன்காகுவா மலைச் சிகரத்தின் கடுமையான வானிலை சூழலை எதிர்கொள்ளவதை பழகும் வகையில் முதலில் அக்குழுவினர் 5050 உயரமுடைய போனெட் சிகரத்தை அடைந்தனர். இக்குழுவில் கேப்டன் ஜி சந்தோஷ்குமார், திரு தீப் பஹதூர் சஹி, திரு வினோத் குசை, நைப் சுபேதர் பூபிந்தர் சிங், ஹவில்தார் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வரை வானிலை நிலவும் பகுதியை இக்குழுவினர் வெற்றிகரமாக அடைந்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232045&reg=3&lang=1

***

AD/IR/RK/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2232076) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi