தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்தை விரைந்து தொடங்குவதற்காக டிஜிட்டல் பாரத் நிதி மற்றும் ஆந்திரப்பிரதேச அரசு இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
இடுகை இடப்பட்ட நாள்:
23 FEB 2026 11:51AM by PIB Chennai
ஆந்திரப்பிரசேத்தின் ஊரகப் பகுதியில் டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதை நோக்கி முக்கியமான நடவடிக்கையாக டிஜிட்டல் பாரத் நிதி, மத்திய அரசின் தொலைத் தகவல் தொடர்புத்துறை மற்றும் ஆந்திரப்பிரதேச அரசு இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இம்மாநிலத்தில் திருத்தப்பட்ட பாரத்நெட் திட்ட அமலாக்கத்தை இது விரைவுபடுத்தும்.
ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு, மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் திரு பெம்மசானி சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில் குன்டூர் மாவட்டம் தடேபள்ளியில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் 2026 பிப்ரவரி 22 அன்று கையெழுத்தானது.
நாட்டின் அனைத்து கிராமத்திற்கும் கண்ணாடி இழை வடம் மற்றும் அகண்ட அலைவரிசையை கொண்டு செல்ல மத்திய அரசின் 16.9 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது, 139,000 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படுவது திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டம் என்று இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு சிந்தியா தெரிவித்தார்.
பதில் சொல்லும் கடமைப் பொறுப்புடன் நிதி ஆதரவையும் இணைக்கும் மாநிலத்தால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் விரைவான அமலாக்கத்திற்கு அடித்தளம் மற்றும் நீடித்த கட்டமைப்பை இந்த ஒப்பந்தம் கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் திரு பெம்மசானி சந்திரசேகர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு, மாநில டிஜிட்டல் மாற்றத்தில் இந்த ஒப்பந்தம் ஒரு மைல்கல்லாகும் என்றும், இது தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நிர்வாகத்தையும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் உறுதி செய்யும் என்றும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231666®=3&lang=1
***
AD/SMB/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2231729)
வருகையாளர் எண்ணிக்கை : 5