இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 22 FEB 2026 6:31PM by PIB Chennai

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகத்தின் (ESIC - இஎஸ்ஐசி) 75 ஆண்டுகால சேவை மற்றும் சமூகப் பாதுகாப்பைக் கொண்டாடும் விதமாக, நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல் இயக்கத்தின் 62-வது பதிப்பு இன்று (22.02.2026) ஏற்பாடு செய்யப்பட்டது. தில்லியில் இதில் இஎஸ்ஐசி தலைமை இயக்குநர் திரு. அசோக் குமார் சிங், கேலோ இந்தியா அமைப்பின் துணை தலைமை இயக்குநர்  திரு. மயங்க் ஸ்ரீவஸ்தவா மற்றும் பிரபல விளையாட்டு வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.

சுறுசுறுப்பான வாழ்க்கை முறையின் நன்மைகளை எடுத்துரைத்த பிரபல ஹாக்கி வீரர் திரு ரூபிந்தர், உடல் திறன் இந்தியா இயக்கத்தின் முக்கிய நோக்கம், மக்கள் தங்கள் தனிப்பட்ட உடற்பயிற்சிக்காக குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை அர்ப்பணிக்க ஊக்குவிப்பதாகும் என்றார். இது வாழ்க்கை முறை தொடர்பான நோய்களைக் குறைக்க மிகவும் முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.

ஒவ்வொருவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உடற்தகுதியில் கவனம் செலுத்தி தங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க ஏதாவது ஒரு உடற்பயிற்சி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 75 ஆண்டுகால சிறந்த சேவையை நிறைவு செய்ததற்காக இஎஸ்ஐசி-யை அவர் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231517&reg=3&lang=1

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2231552) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Gujarati