மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

இந்தியாவில் உள்ளடக்கிய குரல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் கொள்கை அறிக்கையும் கருவித்தொகுப்பும் வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 21 FEB 2026 1:05PM by PIB Chennai

இந்தியாவில் டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கு குரல் தொழில்நுட்பங்கள் அடித்தளமாகி வருகின்றன.  பல லட்சக் கணக்கான மக்கள் பொது சேவைகள், தகவல், டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை இந்த தொழில்நுட்பங்கள் வடிவமைக்கின்றன. இந்தப் பின்னணியில், திறந்த, உள்ளடக்கிய, பொறுப்பான குரல் தொழில்நுட்பங்களைக் கொண்ட கொள்கை, நடைமுறைக் கட்டமைப்பை அமைக்க, பிப்ரவரி 20, 2026 அன்று இந்திய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு, கண்காட்சி 2026-ல் குரல் தொழில்நுட்பங்கள் குறித்த புதிய கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது. அத்துடன் இவற்றை  உருவாக்குபவர்களுக்கான கருவித்தொகுப்பும் வெளியிடப்பட்டது.

இந்தியா போன்ற மொழியியல் ரீதியாக பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், குரல் தொழில்நுட்பங்கள் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளன. பேச்சு அடிப்படையிலான பயன்பாடுகள் மூலம் டிஜிட்டல் அணுகலுக்கான தடைகளை இந்த தொழில்நுட்பங்கள் குறைக்கின்றன. இருப்பினும், பேச்சு தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, பயன்பாடு, தரவு நிர்வாகம், உள்ளடக்கம், வெளிப்படைத்தன்மை, தரம் ஆகியவற்றில் சிக்கலான அம்சங்கள் உள்ளன. இந்த சவால்களை எதிர்கொள்ள கொள்கை அளவிலான ஒருங்கிணைப்பும் சீரமைப்பும் தேவைப்படுகிறது.

தரவு சேகரிப்பு, மாதிரி மேம்பாடு முதல் உள்கட்டமைப்பு, நிர்வாக நடைமுறைகள் என பலவற்றில் பொறுப்பான குரல் அமைப்புகளை உருவாக்குவதில் உள்ள முக்கிய தடைகளை கொள்கை அறிக்கை ஆராய்கிறது. குரல் தொழில்நுட்பச் சூழல் அமைப்பை வலுப்படுத்த இலக்குடன் கூடிய கொள்கைப் பரிந்துரைகளை இது முன்மொழிகிறது.

மொழியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், செயற்கை நுண்ணறிவு நெறிமுறையாளர்கள் ஆகியோருடனான தொடர் கலந்துரையாடல்களின் மூலம் தொகுக்கப்பட்ட இந்தக் கொள்கை அறிக்கை தகவல் தொடர்பு இடைவெளிகளைக் குறைப்பதற்கும் மொழியியல் தடைகளை உடைப்பதற்கும், பன்மொழி தீர்வுகளில் பாஷினியின் விரிவாக்கப் பணிகளுக்கும் உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231128&reg=3&lang=1

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2231266) வருகையாளர் எண்ணிக்கை : 109
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Telugu