குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு தேசிய உச்சி மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் உரையாற்றினார்

மாற்றத்தை ஏற்படுத்த அரசு, தொழில்துறையினர், சமூகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புத் தேவை: குடியரசுத் துணைத் தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 21 FEB 2026 2:05PM by PIB Chennai

புதுதில்லி பாரத் மண்டபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் ஏற்பாடு செய்திருந்த பெருநிறுவன சமூகப் பொறுப்பு தேசிய உச்சி மாநாடு 2026-ல் குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் உரையாற்றினார்.

உச்சிமாநாட்டைக் ஏற்பாடு செய்த டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தை குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டினார். நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படும்போது, சமூகமும் தேசமும் கூட்டாக முன்னேறுவதாக அவர் கூறினார். இந்தியாவின் பயணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த தருணத்தில் அரசு, தொழில்துறை நிறுவனங்கள், சமூக ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்பதை அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துரைத்த அவர், இந்தியா உலகின் 4வது பெரிய பொருளாதாரமாக முன்னேறியுள்ளது என்றும், மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் சென்று கொண்டு உள்ளது என்றும் குறிப்பிட்டார். கட்டமைப்பு சீர்திருத்தங்கள், நிதி உள்ளடக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை 25 கோடிக்கும் மேற்பட்ட மக்களை தீவிர வறுமையிலிருந்து மீட்டெடுத்துள்ளன என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

பெரு நிறுவன சமூகப் பொறுப்பு தேசிய முன்னேற்றத்திற்கு மையமானது என்று அவர் கூறினார்.  தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையையும், 2047-ம் ஆண்டுக்கான வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கையும் வலியுறுத்திய அவர், வளர்ச்சி பரந்த அடிப்படையிலானதாக இருக்க என்று கூறினார்.  அரசு, தொழில்துறை, சிவில் சமூகம் இணக்கமாகச் செல்லும்போதுதான் மாற்றம் ஏற்படுகிறது எனவும் இதுவே இந்த உச்சிமாநாட்டின் சாராம்சம் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231151&reg=3&lang=1

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2231246) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam