அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
செயற்கை நுண்ணறிவு மருத்துவ சாதனங்கள் மூலம் நோயறிதலை எளிதாக்கி நோயாளிகளுக்கு துல்லியமான சிகிச்சையை வழங்க முடியும் - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
21 FEB 2026 4:05PM by PIB Chennai
மருத்துவ நோயறிதலில் சிக்கல்களை நீக்கி, நோயாளிகளுக்கு மிகவும் துல்லியமான சிகிச்சையை உறுதி செய்யும் வகையில் செயற்கை நுண்ணறிவு மருத்துவக் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று மத்திய அறிவியல் - தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற சர்வதேச பல்துறை சிறப்பு மருத்துவ மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், செயற்கை நுண்ணறிவானது, மருத்துவத்தில் மனிதரால் ஏற்படும் பிழையைக் குறைக்கும் என்று கூறினார்.
மருத்துவ அறிவியலின் பரிணாம வளர்ச்சியைக் குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், பாரம்பரிய மருத்துவத்தில் இருந்து இப்போது, இமேஜிங், மூலக்கூறு கருவிகள், அல்ட்ராசவுண்ட், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ, இப்போது ஜெனோமிக்ஸ் ஆகியவற்றால் இயக்கப்படும் ஒரு நவீன சகாப்தத்திற்கு மாறியுள்ளதாகக் கூறினார். இந்தியாவில் நோய்களின் நிலை குறித்து அமைச்சர் விரிவாகப் பேசினார். தென்னிந்தியாவில் நீரிழிவு நோய் அல்லது இமயமலைப் பகுதிகளில் தைராய்டு கோளாறுகள் போன்ற ஒரு காலத்தில் பிராந்திய ரீதியாகக் காணப்பட்ட நிலைமைகள் இப்போது நாடு முழுவதும் பரவலாக உள்ளன என்றார். இது வாழ்க்கை முறை மாற்றங்களையும் கிராமப்புற-நகர்ப்புற வேறுபாடுகள் குறைந்ததையும் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். ஆயுட்காலம் அதிகரித்துள்ள நிலையில் முதுமை தொடர்பான நோய்கள் அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் வாழ்க்கை முறை கோளாறுகள் இளம் வயதிலேயே தோன்றுகின்றன என அவர் குறிப்பிட்டார். இந்தச் சூழலில், துல்லியமான நோயறிதல்கள் இன்றியமையாததாகிவிட்டன என அவர் கூறினார்.
நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் 40 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால், அந்த இளைஞர் சக்தியின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கு முக்கிய அம்சமாக உள்ளது என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231199®=3&lang=1
***
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2231233)
வருகையாளர் எண்ணிக்கை : 10