PIB Backgrounder
சரஸ் ஆஜ்வீகா மேளா - கைவினைப்பொருட்களின் கண்காட்சி
प्रविष्टि तिथि:
21 FEB 2026 12:25PM by PIB Chennai
குருகிராமில், சரஸ் ஆஜீவிகா மேளா எனப்படும் கைவினைப் பொருட்களின் கண்காட்சி 2026 பிப்ரவரி 10 முதல் 26 வரை நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சிக்குச் சென்றால் நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இந்த நிகழ்வு 28 மாநிலங்களைச் சேர்ந்த 900 க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோரை
ஒன்றிணைத்துள்ளது. அவர்களது சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மாநில அரங்குகள் 450-க்கும் அதிகமாக உள்ள இந்த விழாவில், உள்ளூர் மரபுகள், கைவினைத் திறன்களுடன் கூடிய தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன. இது "மினி இந்தியா" என்று பார்வையாளர்களால் விவரிக்கப்படுகிறது. பார்வையாளர்கள் காஷ்மீரின் பஷ்மினா சால்வைகள் , தமிழ்நாட்டின் பட்டு ஜவுளிகள் , ராஜஸ்தானின் எம்பிராய்டரி செய்யப்பட்ட ரகங்கள், அசாமின் மூங்கில் கைவினைப்பொருட்கள் ஆகியவற்றைக் கண்டு வியக்கின்றனர்.
இவற்றுடன் பிராந்திய உணவுகள், கைவினைப்பொருட்கள், கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.
கைவினைப்பொருட்கள், ஜவுளிகளின் காட்சி கவர்ச்சியைத் தாண்டி, சமூக-பொருளாதார மாற்றத்தை இந்த விழா ஏற்படுத்துகிறது.
சரஸ் ஆஜீவிகா மேளாவின் ஒவ்வொரு அரங்கிலும் உழைப்பை அங்கீகரிக்க இடம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231120®=3&lang=1
***
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2231175)
आगंतुक पटल : 91