புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
ஆளுகைக்காக நிர்வாகத் தரவைப் பயன்படுத்துதல் மாநில அளவில் துறைகளின் தரவை ஒருங்கிணைத்தல் என்ற தலைப்பில் தேசிய அளவிலான பயிலரங்கிற்கு ஏற்பாடு
இடுகை இடப்பட்ட நாள்:
21 FEB 2026 8:50AM by PIB Chennai
"ஆளுகைக்காக நிர்வாகத் தரவைப் பயன்படுத்துதல்: மாநில அளவில் துறைகளின் தரவை ஒருங்கிணைத்தல்" என்ற தலைப்பில் மத்திய அமைச்சகங்கள், துறைகள், பிற தொடர்புடைய அமைப்புகளுடன் இணைந்து, 2026 பிப்ரவரி 24, அன்று விஞ்ஞான் பவனில் புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) தேசிய அளவிலான ஆலோசனைப் பயிலரங்கை ஏற்பாடு செய்துள்ளது .
"ஆளுகைக்காக நிர்வாகத் தரவைப் பயன்படுத்துதல்: மாநில அளவில் துறைத் தரவை ஒருங்கிணைத்தல்" என்ற தலைப்பில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் 2026 ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருக்கும் "வளர்ச்சிக்கான தரவு" என்ற தேசிய அளவிலான கலந்துரையாடல் உச்சிமாநாடு நடைபெற உள்ளது. அதன் ஆயத்த செயல்முறையின் ஒரு பகுதியாக இந்தப் பயிலரங்கு நடைபெறுகிறது. 2025 டிசம்பரில் நடைபெற்ற 5-வது மாநில/யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்கள் மாநாட்டின் தொடர்ச்சியாக இதை புள்ளியியல் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
நிர்வாக தரவு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும், மாநில/ யூனியன் பிரதேச நிலையில், துறைகளுக்கு இடையே பொறுப்பான தரவு ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கும் ஒரு கட்டமைக்கப்பட்ட தேசிய செயல்திட்டத்தை உருவாக்குவதே ஏப்ரலில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டின் நோக்கமாகும்.
அதன் முன்னோட்டமாக நடைபெறும் இந்த ஆலோசனைப் பயிலரங்கு, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு, அடுத்தடுத்த பயிலரங்குகளில் விவாதிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து விளக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசு, சர்வதேச நிறுவனங்கள், தொழில்துறையினர், சிந்தனையாளர்கள், கல்வித்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் ஆகியோர் நிர்வாகத் தரவை ஒருங்கிணைப்பதன் பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த ஆலோசனைப் பயிலரங்கில் விவாதிப்பார்கள். இதில் கிடைக்கும் உள்ளீடுகள் ஏப்ரல் 2026-ல் நடைபெறும் தேசிய அளவிலான உச்சிமாநாட்டில் விவாதிக்கப்படும்.
இந்த ஆலோசனைப் பயிலரங்கில் மாநில/ யூனியன் பிரதேச அரசுகளின் திட்டமிடல், தகவல் தொழில்நுட்பத் துறைகளின் அதிகாரிகள், மத்திய அமைச்சகம்/துறைகளின் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231080®=3&lang=1
***
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2231168)
வருகையாளர் எண்ணிக்கை : 8