பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

பிரதமர் திரு நரேந்திர மோடியைப் பின்லாந்து பிரதமர் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 18 FEB 2026 2:04PM by PIB Chennai

பின்லாந்து பிரதமர் திரு. பெட்டேரி ஓர்போ இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இரு நாடுகளும் வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதனால் பொருளாதார இணைப்புகளுக்கு வலுவான ஊக்கத்தை அளிக்கின்றன.

6ஜிபுதுமைசுத்தமான எரிசக்திஉயிரி எரிபொருள்கள், சுழற்சிப் பொருளாதாரம் போன்ற எதிர்காலத் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  தனித்தனி இடுகைகளில்திரு  மோடி கூறியிருப்பதாவது:

"பின்லாந்து பிரதமர் திரு பெட்டேரி ஓர்போவுடன் விரிவான விவாதங்களை நடத்தினேன்.

இந்தியா-ஐரோப்பா உறவுகளில் ஒரு பொற்காலத்தைத் தொடங்கும் இந்தியா-ஐரோப்பிய யூனியனின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு  அவர் அளித்த தனிப்பட்ட ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். இந்தியாவும் பின்லாந்தும் வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு வைத்துள்ளனஇதனால் பொருளாதார இணைப்புகளுக்கு வலுவான ஊக்கத்தை அளிக்கிறது. 6ஜிபுதுமைசுத்தமான எரிசக்திஉயிரி எரிபொருள்கள், சுழற்சிப் பொருளாதாரம் போன்ற எதிர்காலத் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் நாங்கள் பேசினோம்.’’

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229529&reg=3&lang=1

***

AD/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2229815) வருகையாளர் எண்ணிக்கை : 8