பிரதமர் அலுவலகம்
எரிசக்தித் துறை தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் உரையாடினார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 JAN 2026 9:09PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தமது இல்லத்தில், நடந்து வரும் இந்திய எரிசக்தி வாரம் 2026-ன் ஒரு பகுதியாக, உலகளாவிய எரிசக்தித் துறையின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் தலைமை நிர்வாக அதிகாரிகள் வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்தினர். கொள்கை நிலைத்தன்மை, சீர்திருத்த உந்துதல் மற்றும் நீண்டகாலத் தேவை ஆகியவற்றை மேற்கோள் காட்டி, இந்தியாவில் தங்கள் வணிக இருப்பை விரிவுபடுத்துவதிலும் ஆழப்படுத்துவதிலும் அவர்கள் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
தலைமை நிர்வாக அதிகாரிகளை வரவேற்ற பிரதமர், இந்தக் கூட்டங்கள் தொழில்-அரசு சீரமைப்புக்கான முக்கிய தளமாக உருவெடுத்துள்ளன என்று கூறினார். உலகளாவிய தொழில்துறைத் தலைவர்களிடமிருந்து வரும் நேரடி கருத்து கொள்கை கட்டமைப்புகளைச் செம்மைப்படுத்தவும், துறைசார் சவால்களை மிகவும் திறம்பட எதிர்கொள்ளவும், இந்தியாவை சிறப்பான முதலீட்டு இடம் என்ற நிலையை வலுப்படுத்த உதவுகிறது என்று அவர் கூறினார்.
இந்தியாவின் வலுவான பொருளாதார உந்துதலை விளக்கிய பிரதமர், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், உலகளாவிய எரிசக்தி தேவை-விநியோக சமநிலையில் தீர்க்கமான பங்கை வகிக்கும் என்றும் கூறினார்.
இந்தியாவின் எரிசக்தித் துறையில் குறிப்பிடத்தக்க முதலீட்டு வாய்ப்புகள் குறித்து பிரதமர் குறிப்பிட்டார். அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட முதலீட்டாளர் நட்பு கொள்கை சீர்திருத்தங்களை மேற்கோள் காட்டி, ஆய்வு மற்றும் உற்பத்தியில் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டு திறனை அவர் எடுத்துரைத்தார்.
உலகளாவிய எரிசக்தி நிலப்பரப்பு நிச்சயமற்ற தன்மையால் குறிக்கப்பட்டாலும், அது மகத்தான வாய்ப்பையும் வழங்குகிறது என்பதை பிரதமர் குறிப்பிட்டார். புதுமை, ஒத்துழைப்பு மற்றும் ஆழமான கூட்டாண்மைகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார், முழு எரிசக்தி மதிப்புச் சங்கிலியிலும் இந்தியா நம்பகமான கூட்டாளியாகத் தயாராக உள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த உயர்மட்ட வட்டமேசைக் கூட்டத்தில், முன்னணி உலகளாவிய மற்றும் இந்திய எரிசக்தி நிறுவனங்களைச் சேர்ந்த 27 தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் மூத்த நிறுவன பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்தக் கலந்துரையாடலில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, இணை அமைச்சர் திரு சுரேஷ் கோபி மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2219805)
AD/PKV/LDN/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2229587)
வருகையாளர் எண்ணிக்கை : 25
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam