தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு புரட்சியின் அடித்தளமாக தொலைத்தொடர்பு திகழ்கிறது- மத்திய அமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர்

இடுகை இடப்பட்ட நாள்: 17 FEB 2026 5:53PM by PIB Chennai

இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்கம் உச்சிமாநாடு 2026-ல் பங்கேற்ற மத்திய தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர், இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு புரட்சியின் அடித்தளமாக தொலைத்தொடர்பு திகழ்கிறது என்று எடுத்துரைத்தார்.

தொலைத்தொடர்பு மற்றும் செயற்கை நுண்ணறிவுக் குறித்த அமர்வில் முக்கிய உரையாற்றிய அவர், இந்தியாவின் விரைவான தொலைத்தொடர்பு வளர்ச்சியை சுட்டிக்காட்டினார். 2014-ம் ஆண்டு அகண்ட அலைவரிசை சந்தாதாரர்கள் எண்ணிக்கை 6 கோடியாக இருந்த நிலையில், 2025-ம் ஆண்டு அது 100 கோடியாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.

ஒரு நபர் சராசரியாக ஒரு மாதத்தில் 24 ஜிபி அளவிற்கு மொபைல் இணைய தரவு வசதியை பயன்படுத்துவதாக கூறினார். கண்ணாடி இழை கேபிள் 42 லட்சம் கிமீ தொலைவிற்கு பதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உலக அளவில் 5ஜி வசதியை விரைவாக அறிமுகப்படுத்திய நாடுகளில்  இந்தியாவும் ஒன்று என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229205&reg=3&lang=1

***

AD/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2229259) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी