பாதுகாப்பு அமைச்சகம்
கோவாவில் உள்ள கடற்படைப் போர் பயிற்சி கல்லூரியில் கோவா கடல்சார் மாநாடு 2026-ஐ இந்தியக் கடற்படை நடத்தவுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
17 FEB 2026 2:03PM by PIB Chennai
5-வது கோவா கடல்சார் மாநாடு 2026 பிப்ரவரி 21 அன்று கோவாவில் உள்ள கடற்படைப் போர் பயிற்சி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்தியக் கடற்படையின் முக்கிய உத்திசார் முன்முயற்சியான இந்த மாநாடு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இருந்து பாதுகாப்பு நடைமுறை அனுபவத்தை பெறுவதற்கு உதவும். இந்த மாநாட்டில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், தலைமை விருந்தினராக பங்கேற்பார். கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் அருண் பிரகாஷ் இந்த மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்துவார்.
பங்களாதேஷ், இந்தோனேசியா, கென்யா, மலேசியா, மியான்மர், இலங்கை, சிங்கப்பூர் உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த கடற்படைத் தளபதிகள், கடல்சார் படைகளின் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் ஆகியோரை கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி வரவேற்று உபசரிப்பார்.
‘இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் பாதுகாப்பு சவால்கள் – சட்டவிரோத மீன்பிடிப்பு மற்றும் சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகள் போன்ற அச்சுறுத்தல்களை குறைப்பதற்கான முயற்சிகளின் முன்னேற்றம்’ என்பது இந்த ஆண்டு மாநாட்டின் மையப் பொருளாகும். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முக்கியமான பிரச்சனைகளில் கடல்சார்ந்த நாடுகளிடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் தேவையை இது பிரதிபலிக்கிறது.
கடல்சார் தகவல்களின் நிகழ்நேர பரிமாற்றம், திறன்களை வலுப்படுத்துவதில் கூட்டு முயற்சிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்த மாநாட்டில் பிரபல உரையாளர்கள், நிபுணர்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்துகொள்வது சிறப்பு அம்சமாக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229079®=3&lang=1
***
AD/SMB/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2229199)
வருகையாளர் எண்ணிக்கை : 10