பாதுகாப்பு அமைச்சகம்
சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல்&டி நிறுவனத்தில் முதல் கேடட் பயிற்சி கப்பலான கிருஷ்ணா இயக்கி வைக்கப்பட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
17 FEB 2026 8:30AM by PIB Chennai
சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல்&டி தளத்தில் கட்டுமானத்தில் உள்ள மூன்று கேடட் பயிற்சி கப்பல்களில் முதலாவதான யார்ட் 18003 (கிருஷ்ணா) கப்பல், நேற்று கடலில் இறக்கப்பட்டது. கடற்படை மரபுகளின்படி, ராணுவத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் முன்னிலையில் திருமதி அனுபமா சவுகான் இந்தக் கப்பலை இயக்கி வைத்தார். இந்திய ஆயுதப் படைகள் மற்றும் எல்&டி கப்பல் கட்டுமானத் தளத்தின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்தக் கப்பல் எல்&டி நிறுவனத்தால் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. கப்பலை இந்தியக் கடற்படைக்கு முறையாக வழங்க 2026 இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கேடட் பயிற்சி கப்பல்கள், அடிப்படைப் பயிற்சிக்குப் பிறகு கடலில் பெண்கள் உட்பட அதிகாரி கேடட்களுக்கும், நட்பு நாடுகளைச் சேர்ந்த கேடட்களுக்கும் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படும்.
உள்நாட்டுக் கப்பல் கட்டுமானத்தை நோக்கிய இந்தியக் கடற்படையின் பயணத்தில் இது மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். மேலும் இது தற்சார்பு இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா முன்னெடுப்பு குறித்த மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க அமைந்துள்ளது.
***
(Release ID: 2228944)
TV/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2229159)
வருகையாளர் எண்ணிக்கை : 6