சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கோதுமை வைக்கோல் எரிப்பதைத் தடுக்க காற்றுதர மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு

இடுகை இடப்பட்ட நாள்: 16 FEB 2026 5:24PM by PIB Chennai

தேசிய தலைநகர் பிராந்தியம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், 2026 அறுவடை காலத்தில் கோதுமை வைக்கோல் எரிப்பதைத் தடுக்கவும், முற்றிலுமாக ஒழிக்கவும் 'தேசிய தலைநகர் பிராந்தியத்தின் காற்றுத் தர மேலாண்மை ஆணையம்' விரிவான சட்டரீதியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரப் பிரதேச மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள விவசாய நிலங்கள் கோதுமை வைக்கோல் மேலாண்மைக்காகக் கண்டறியப்பட்டு (மண்ணிலேயே மக்கச் செய்தல் அல்லது மாற்றுப் பயன்பாடு), முறையாக வரைபடமாக்கப்பட வேண்டும். பயனுள்ள கண்காணிப்புக்காக, ஒவ்வொரு 100 விவசாயிகளுக்கும் ஒரு நோடல் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வாடகையின்றி இயந்திரங்கள் கிடைப்பதை உறுதி செய்யவும், 'பராலி பாதுகாப்புப் படை' என்ற தனிப்படையை மாவட்ட அளவில் அமைத்துக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மாலை நேரங்களில் ரோந்துப் பணிகளை அதிகரிப்பதோடு, விதிமீறுபவர்கள் மீது சுற்றுச்சூழல் இழப்பீடு வசூலிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2228743&reg=3&lang=1

 வெளியிட்டு அடையாள எண் : 2228743)

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2228906) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी