தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு 2026-ல் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மற்றும் கேமிங் புத்தொழில் நிறுவனங்கள் முக்கிய இடம்பிடித்தன
இடுகை இடப்பட்ட நாள்:
16 FEB 2026 3:36PM by PIB Chennai
செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய முதன்மை மாநாடான இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு 2026 என்பது அரசுகள், தொழில்நுட்பத் தலைவர்கள், புத்தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், ஆய்வாளர்கள், கொள்கை வகுப்பாளர்களை ஒருங்கிணைக்க உள்ளது. இது அனைத்து தொழில்துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் மாற்றத்திற்கான தாக்கம் குறித்து ஆய்வு செய்யும்.
கேமிங் மற்றும் இடையீட்டு தொழில்நுட்ப வகைமையின் கீழ், இந்தியாவில் 5 முன்னணி புத்தொழில் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த 5 புத்தொழில் நிறுவனங்களின் பங்கேற்பு, செயற்கை நுண்ணறிவு உதவியுடனான கேமிங், கதை சொல்லல் போன்றவற்றில் இந்தியாவின் விரிவடைந்த திறன்களை சுட்டிக்காட்டுகிறது. உலகளாவிய போட்டித் தன்மையை கட்டமைக்க விரிவான தேசிய லட்சியத்தையும் இவற்றின் பங்கேற்பு பிரதிபலித்தது.
செயற்கை நுண்ணறிவு உதவியுடனான இந்தியாவின் கேமிங் துறையில் முதலீடு செய்தல் என்பது குறித்த சிறப்பு குழு விவாதம் இந்திய கேம் உருவாக்குவோர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் கேம் உருவாக்கம் மற்றும் இடையீட்டு ஊடகத்தில் இந்தியாவின் விரிவடையும் செல்வாக்கு குறித்து உலகளாவிய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் ஈடுபட்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2228676®=3&lang=1
****
TV/SMB/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2228888)
வருகையாளர் எண்ணிக்கை : 14