பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவிற்கு பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 FEB 2026 10:19AM by PIB Chennai

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் நினைவு நாளில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்குப் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். மாண்புகளில் வேரூன்றியுள்ள அவரது கோட்பாடுகளும், சிந்தனைகளும் நாட்டின் ஒவ்வொரு தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளி விளக்காக தொடர்ந்து நீடிக்கும் என்று திரு மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“தாய்நாட்டின் மீது தீவிர பக்தி கொண்ட பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்களுக்கு அவரது நினைவு நாளில் மதிப்புமிகு புகழஞ்சலி. மாண்புகளில் வேரூன்றியுள்ள அவரது கோட்பாடுகளும், சிந்தனைகளும் நாட்டின் ஒவ்வொரு தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளி விளக்காக தொடர்ந்து நீடிக்கும்.”  

***

(Release ID: 2226153)

TV/SMB/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2226414) வருகையாளர் எண்ணிக்கை : 10