மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரித்தது

இடுகை இடப்பட்ட நாள்: 09 FEB 2026 9:11AM by PIB Chennai

இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், பெரிய கடல்வாழ் உயிரின உற்பத்தியாளராகவும் திகழ்கிறது. உலகளாவிய மீன் உற்பத்தியில் இந்தியா சுமார் 8 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது.

11,099 கிமீ தொலைவிற்கு கடலோரப் பகுதிகளையும் ஆறுகள், நீர்நிலைகள், ஈர நிலங்கள், மீன்வளர்ப்பு போன்ற நாட்டின் செழுமையான கட்டமைப்புகளைக் கொண்டுள்ள இந்தியா, 3 கோடி பேரின் வாழ்வாதாரங்களுக்கு வழிவகுக்கிறது.   அத்துடன் அந்நியச் செலாவணியை ஈட்டுவதில் பெரும் பங்களிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மீன்வளத்துறை சிறந்த வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி இதுவரை இல்லாத அளவாக 197 லட்சம் டன்னாக இரட்டிப்பாக அதிகரித்தது. இது 2013-14-ம் நிதியாண்டில் 95.79 லட்சம் டன்னாக இருந்தது. பொருளாதார ரீதியாக  மீன் வளர்ப்புத்துறை அந்நியச் செலாவணியை ஈட்டுவதில் மிகப்பெரிய பங்களிப்பைக் கொண்டுள்ளது.

2024-25-ம் நிதியாண்டில் ரூ.62,408 கோடி அளவிற்கு மீன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் இறால் வகை  முக்கியப் பொருளாகும். இதற்கு அமெரிக்கா, சீனா, ஆகிய நாடுகள் முக்கிய சந்தைகளாக விளங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2225246&reg=3&lang=1

 

****

TV/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2225592) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi