PIB Headquarters
azadi ka amrit mahotsav

இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக வெற்றி, முக்கியத் துறைகளில், 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதி சந்தைக்கான வாய்ப்பை வழங்கியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 09 FEB 2026 12:08PM by PIB Chennai

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம், 30 டிரில்லியன் டாலருக்கும் கூடுதல் மதிப்புள்ள அமெரிக்கச் சந்தையில் இந்திய பொருட்களின் ஏற்றுமதிக்குத் தொடர் முன்னுரிமையை உறுதி செய்கிறது. இந்த ஒப்பந்தம் விரிவான வரி சீரமைப்பு, பெரும் அளவிலான பொருட்களுக்கு பூஜ்ஜிய வரி விகிதம், மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டுத் தொழில்துறைகளைப் பாதுகாப்பதற்காக கவனமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பை வழங்குகிறது.

2024 - ம் ஆண்டில், அமெரிக்காவிற்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 86.35 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், இந்த ஒப்பந்தம் ஜவுளி, தோல், செயற்கை கற்கள் மற்றும் நகைகள், விவசாயம், இயந்திரங்கள், வீட்டு அலங்காரம், மருந்துகள், தொழில்நுட்பம் சார்ந்த தொழில்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் போட்டித்தன்மையை மேம்படுத்துகிறது.

ஜவுளி மற்றும் ஆடைத் துறையில் வரி 50% முதல் 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 113 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அமெரிக்கச் சந்தையில் பட்டுக்கு 0% வரி விலக்கு கிடைத்துள்ளது.

இயந்திர ஏற்றுமதிக்கான வரிகள் 18% ஆகக் குறைக்கப்பட்டு, 477 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அமெரிக்கச் சந்தை வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

1.36 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்திய விவசாய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்காவில் கூடுதல் வரி விலக்கு கிடைத்துள்ளது.

மசாலாப் பொருட்கள், தேநீர், காபி, பழங்கள், கொட்டைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளிட்ட முக்கியப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பால் பொருட்கள், இறைச்சி, கோழி மற்றும் தானியங்கள் போன்ற துறைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2225318&reg=3&lang=1

(Release ID: 2225318)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2225583) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Bengali , Gujarati