PIB Headquarters
azadi ka amrit mahotsav

செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டின் முக்கியத்துவம்

இடுகை இடப்பட்ட நாள்: 08 FEB 2026 12:17PM by PIB Chennai

இந்தியா அதன் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய கட்டத்தில் உள்ளது. செயற்கை நுண்ணறிவு ஒரு முக்கிய தூணாக உருவாகி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, தொழில்நுட்பத்தின் ஜனநாயகமயமாக்கலுக்கும், அணுகல், உள்ளடக்கம், சமத்துவம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கும் செயற்கை நுண்ணறிவு தேசிய கருவியாக செயல்படுகிறது. இந்த தொழில்நுட்ப புரட்சி, மனித முயற்சியின் ஒவ்வொரு களத்திலும் முன்னேற்றங்களுக்கு பரந்த வாய்ப்புகளைத் திறந்துள்ளது. உலகளாவிய தொழில்நுட்பம் மன்றங்களில் இந்தியாவின் பங்கு தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த சர்வதேச கொள்கையை வடிவமைப்பதில் இந்தியாவின் ஈடுபாட்டைப் பிரதிபலிக்கிறது.

இந்த வளர்ந்து வரும் உலகளாவிய ஈடுபாட்டின் ஒரு பகுதியாக, இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாடு 2026 பிப்ரவரி 16 முதல் 20 வரை புது தில்லியில் நடைபெற உள்ளது. இது உலகளாவிய தெற்கு நாடுகளில் நடத்தப்படும் முதல் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடாகும் .

இந்த உச்சிமாநாடு அனைவருக்கும் நலன், அனைவருக்கும் மகிழ்ச்சி, மனிதகுலத்திற்கான செயற்கை நுண்ணறிவு என்ற தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுகிறது. இது உலகளாவிய தொழில் துறைத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், நிபுணர்களை ஒன்றிணைத்து நிர்வாகம், நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை வரையறுக்க உதவும்.

இந்த உச்சி மாநாடு மூன்று அடிப்படைத் தூண்களை மையமாக கொண்டதாகும்.

மக்கள், பூமி, முன்னேற்றம் என்பவையே அவை. இதில் 15 முதல் 20 அரசுத் தலைவர்கள், 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள், 40க்கும் மேற்பட்ட தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உச்சிமாநாடு இந்தியாவை உலகளாவிய செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பில் ஒரு ஒருங்கிணைப்பாளராக நிலைநிறுத்தும்.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணையதள இணைப்புகளைப் பார்க்கவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2225069&reg=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206767&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2216760&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097709&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200799&lang=1&reg=3

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/nov/doc2025115685601.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179035&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2158416&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2148517
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2177440&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176362&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186327&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178092&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209737&reg=3&lang=2

https://impact.indiaai.gov.in/

https://psa.gov.in/CMS/web/sites/default/files/publication/WP_Democratising%20Access_V3.0_29122025A.pdf

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2225228) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati