பாதுகாப்பு அமைச்சகம்
ஐஎன்எஸ் சுதர்ஷினி கப்பல் ஓமனில் முதல் துறைமுகப் பயணத்தை நிறைவு செய்தது
இடுகை இடப்பட்ட நாள்:
08 FEB 2026 11:30AM by PIB Chennai
இந்திய கடற்படையின் பாய்மரப் பயிற்சிக் கப்பலான ஐஎன்எஸ் சுதர்ஷினி, 2026 பிப்ரவரி 05 அன்று ஓமனின் சலாலாவில் தனது முதல் துறைமுகப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இந்தப் பயணம், இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்தையும், உலகம் ஒரே குடும்பம் என்ற நெறிமுறைகளையும் வெளிப்படுத்தும் நோக்கில் அமைந்து இருந்தது.
இந்தப் பயணத்தின் போது, ஐஎன்எஸ் சுதர்ஷினியின் தலைமை அதிகாரி, ஓமன் கடற்படையின் தெற்கு கடற்படைப் பகுதித் தளபதி ஆகியோர் கலந்துரையாடினர். இந்த உரையாடல்கள் இந்தியாவிற்கும் ஓமனுக்கும் இடையிலான வரலாற்று கடல்வழி தொடர்புகளை எடுத்துக்காட்டுவதாகவும், இரு கடற்படைகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதாகவும் அமைந்தன.
மக்களிடையேயான தொடர்பை வெளிப்படுத்தும் விதமாக, பாய்மரப் பயிற்சி கப்பல் பார்வையாளர்களுக்குத் திறந்திருந்தது. பள்ளிக் குழந்தைகள் உட்பட 600-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு நேரடியாகப் பார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
***
(Release ID: 2225063)
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2225205)
வருகையாளர் எண்ணிக்கை : 13