சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

20 மொழிகளில் டெலி-மானஸ் மனநலச் சேவை புதுதில்லி, பிப்ரவரி 6, 2026

प्रविष्टि तिथि: 06 FEB 2026 5:30PM by PIB Chennai

நாடு முழுவதும் தரமான மனநல ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட ‘தேசிய தொலை மனநலத் திட்டம்’ தற்போது 20 மொழிகளில் சேவைகளை வழங்கி வருவதாக மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் மக்களவையில் தெரிவித்தார்.

அக்டோபர் 10, 2022-இல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், இதுவரை 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 53 டெலி-மானஸ் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 32.84 லட்சத்திற்கும் அதிகமான அழைப்புகள் கையாளப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, 2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டெலி-மானஸ் கைபேசி செயலி, தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 10 கூடுதல் மொழிகளுடன் மொத்தம் 12 மொழிகளில் கிடைக்கிறது.

பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கெனப் பிரத்யேக டிஜிட்டல் இடைமுகம் மற்றும் வீடியோ ஆலோசனை வசதிகளும் இதில் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஆயுதப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காகப் புனேவில் உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தாக்கம் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கை, திட்டத்தின் சிறப்பான செயல்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

***

(Release ID: 2224522)

TV/VK/RK


(रिलीज़ आईडी: 2224875) आगंतुक पटल : 74
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी