ரெயில்வே அமைச்சகம்
2014-15 மற்றும் 2024-25 இடையே இந்திய ரயில்வேயில் 5.08 லட்சம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்: மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்
இடுகை இடப்பட்ட நாள்:
06 FEB 2026 5:41PM by PIB Chennai
காலண்டர் ஆண்டு 2024- 2025 நிலவரப்படி இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 1,43,086 அரசிதழ் பதிவுறா அதிகாரிகளின் இடங்களைப் பூர்த்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொழில்நுட்ப வல்லுநர்கள், இளநிலை பொறியாளர்கள், துணை மருத்துவப் பிரிவுகள், துணை ஆய்வாளர்கள் (ரயில்வே பாதுகாப்புப் படை) மற்றும் உதவி லோகோ பைலட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 34,000 க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கான குழுக்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்புப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ரயில்வேயில் 2004-05 முதல் 2013-14 வரை 4.11 லட்சம் பணியமர்த்தல்களும், 2014-15 முதல் 2024- 25 வரை 5.08 லட்சம் பணியமர்த்தல்களும், 2025-26 இல் (இப்போதுவரை) 34,929 பணியமர்த்தல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2224536)
TV/BR/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2224869)
வருகையாளர் எண்ணிக்கை : 20